தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் குறிப்பிட்ட சில வருடங்களாக தொடர்ந்து நடிக்கும் படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் படங்களாக மாறுகின்றன அதில் இவரது நடிப்பு திறமையும் போற்றப்படும் வகையில் இருப்பதால் இவர் தமிழ் சினிமாவில் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார்.
மேலும் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கின. அந்த வகையில் கடந்த 2004ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் “கில்லி”. இந்த திரைப்படம் விஜய்யின் சினிமா கேரியரில் ஒரு முக்கிய திருப்புமுனை படம்.
மேலும் விஜய்க்கு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்திழுத்து கொடுத்தது இந்த படம் தான். கில்லி திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்திருந்தார். ஏ. எம் ரத்தினம் இந்த படத்தை தயாரித்திருந்தார். தரணி கில்லி படத்தை இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படம் ஒரு ரீமேக்ஸ் திரைப்படமாகும். ஆம் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்து இருந்தாலும் தமிழிலும் இந்த திரைப்படம் ஜோராக ஓடியது. கில்லி படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, பிரகாஷ்ராஜ், தாமு மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்
படம் வெளியாகி நல்ல வரவேற்பு கண்டது மேலும் விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்லதொரு வெற்றியை கண்டது. கில்லி திரைப்படம் பெரிய ஒரு வசூல் சாதனையை செய்தது 35 கோடி ஈட்டியது. 35 கோடி என்பது மிகப்பெரிய ஒரு விஷயம் மேலும் அப்போதைய காலகட்டத்தில் 35 கோடியைத் தொட்ட முதல் திரைப்படம் விஜய்க்கு இதுதான்.