ரஜினியின் 169 படத்தால் விழிபிதுங்கி போயிருக்கும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் – காரணம் டாப் நடிகர்கள் தானாம்.?

rajini-and-nelson-
rajini-and-nelson-

நெல்சன் திலீப் குமார் டாக்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இப்போது தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் என்னும் படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக ரஜினியுடன் கைகொடுத்து 169 திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் நெல்சன் ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் சற்று கவலையுடன் தான் இருந்து வருகிறார். காரணம் சமீப காலமாக நெல்சன்  இயக்கும் திரைப்படங்களில் ஒரு சில குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் தற்போது ரஜினியை வைத்து இயக்குவதால் அந்த பிரபலங்கள் நிச்சயம் ரஜினியுடன் படத்தில் நடித்துவிட வேண்டும் என ஆசை இருந்து வந்துள்ளதை பல தடவை கூறி உள்ளனர்.

அந்த வகையில் ரஜினியின் தீவிர ரசிகராக இருக்கும் சிம்பு பல தடவை ரஜினியுடன் நீங்கள் இணைந்து படம் பண்ணும்போது எனக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என கேட்டுள்ளாராம் அதேபோல சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படத்தை எடுத்துள்ளார் இதன் மூலமாக இருவரும் நல்ல நண்பர்களாக மாறி உள்ளனர் தற்போது சிம்புவுக்கு கொடுத்துவிட்டு இவருக்கு வாய்ப்புகள் கொடுக்காமல் போனால் கோவித்து கொள்வார் என்பதை உணர்ந்துகொண்டு இவருக்கும் ரஜினியின் படத்தில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற சூழல் உருவாகி உள்ளது.

மற்றபடி இந்த படத்தில் அனிருத், யோகி பாபு வாய்ப்புகள் தர வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது ஏனென்றால் நெல்சன் படங்களில் இவர்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் அப்படி பார்க்கையில் இவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.

அதேசமயம் நெல்சன் சற்று பயத்திலும் இருக்கிறார் காரணம் இவர்கள் அனைவருக்கும் நாம் கதாபாத்திரங்களை வைத்து கொடுத்து ஒருவேளை படம் ஹிட்டாக வில்லை என்றால் நம் நிலைமை அதோகதிதான் என்ற பயமும் அவருக்கு வந்துள்ளதாம் இதனால் ரஜினியின் படத்தை எடுப்பதற்குள் ஒரு வழி ஆகி விடுவார் என்பதும் நன்றாகவே புரிந்து வைத்துள்ளாராம் நெல்சன்.