ஆதிபுருஷ் டீசரை பார்த்து விட்டு “பிரபாஸ்” சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா.?

adipurush
adipurush

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்திற்கு பிறகு இவரது சினிமா பயணமே மாறி உள்ளது.  பாகுபலி படம் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது பாகுபலி இரண்டாவது பாகம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது அதனை தொடர்ந்து பிரபாஸின் மார்க்கெட் கிடு கிடு என விண்ணைத் தொட்டது தற்பொழுது பிரபாஸ் ஒரு படத்தில் நடிக்க கிட்டத்தட்ட 100 கோடி சம்பளம் வாங்குகிறார்.

ஆனால் இவர் கடைசியாக நடித்த ஒரு சில திரைப்படங்கள் தோல்வி படங்களாகவே இருக்கின்றன அதில் இருந்து மீண்டு வர சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் ஹிந்தியில் வெளியான தன்ஹாஜி தி அன்சங் வாரியர் என்கின்ற படத்தை இயக்கிய தேசிய விருது பெற்றவர் ஓம் ராவத் இவர் இயக்கத்தில் ராமாயண கதையை தழுவி உருவாகி வரும் படம் ஆதிபுருஷ்.

இந்த படம் மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகியுள்ளது இந்த படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார் அவருடன் கைகோர்த்து கீர்த்தி சனோன் ஜோடியாக நடிக்கிறார் மேலும் சயீஃப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இதனால்  இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின்  டீசர் அண்மையில் வெளிவந்தது.

டீசரை பார்த்த ரசிகர்கள் இது ஒரு பொம்மை படம் போல இருப்பதாக கூறி கமெண்ட் அடிக்க ஆரம்பித்தனர். மேலும் அந்த தகவல் இணையதள பக்கத்தில் வைரலானது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் படத்தின் டீசர் பத்திரிக்கையாளர்களுக்கு 3d தொழில்நுட்ப திரையிடப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் படம் குறித்து பேசிய பிரபாஸ் ஆதிபுருஷ் டீசரை முதலில் திருடி எஃபெக்டில் பார்த்தபோது ஒரு குழந்தை மாதிரியாக பரவசம் அடைந்தேன்.

இந்த டீசரை ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60-க்கும் மேற்பட்ட திரையரங்களில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம் இது நிச்சயம் திரையரங்குகளில் காண வேண்டிய ஒரு படம் படத்திற்காக உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டி காத்திருக்கிறோம் அதே வேளையில் அடுத்த 10 தினங்களுக்கு இந்த படம் குறித்து பல சப்பரைஸான கண்டெண்டுகளை வழங்க இருக்கிறோம் என கூறியுள்ளார்.