விரைவில் முடிய இருக்கும் ஜீ தமிழின் பிரபல சீரியல்.! வருத்தத்தில் ரசிகர்கள்.

gokulathil sethai
gokulathil sethai

தமிழகத்தில் மக்களால் அதிக பார்க்கப்படும் தொலைக்காட்சிகள் விஜய்,சன் மற்றும் ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளை மக்கள் விரும்பிப் பார்ப்பார்கள்.இதில் சன் டிவி டிஆர்பி-யில் முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் எல்லா தொலைக்காட்சியிலும் பழைய சீரியல்கள் முடிவுக்கு வந்தால் அதையடுத்து புதிய தொடர்கள் ஆரம்பிக்கின்றன. அப்படி பார்த்தால் ஜீ தமிழில் இதுவரை 3,4 புதிய தொடர்கள் வந்தது.இந்நிலையில் ஜீ தமிழில் ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போகிறது. இன்று ஒரு தகவல் வந்தது.

அதாவது மக்களின் ஆதரவைப் பெற்று வந்த கோகுலத்தில் சீதை சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக ஒரு தகவல் கூறப்படுகிறது. இதைக் கேட்ட ரசிகர்கள் பெரிதும் வருத்தத்தில் இருக்கிறார்கள். நல்லா ஓடிக் கொண்டிருந்த சீரியலை இவ்வளவு சீக்கிரமாக முடிவுக்கு கொண்டு வர காரணம் என்ன என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

இதில் நடித்து வரும் ஹீரோவான நந்தாவுக்கும் ஹீரோயினாக நடித்து வந்த ஆஷா கெளடாவுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஈடாகாது.காரணம் கோகுலத்தில் சீதை சீரியல் அனைவருக்கும் மிகவும் பிடித்து வந்தது அதற்கென்ன ரசிகர்கள் தனி பட்டாளமே உருவாக்கின.

இந்நிலையில் அடுத்த சீரியலில் நடிப்பார்களா என்ற கேள்வியை கேட்கத் தொடங்கினர் ரசிகர்கள் இனி என்ன நடக்க இருப்பது என்பதை காத்திருந்து பார்க்கலாம்.