பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் சீரியலின் மூலம் புதிதாக அறிமுகமாகும் நடிகர், நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் தனது முதல் சீரியலிலேயே ரசிகர்களின் மனதை நடிகைகள் கவர்ந்து விடுகிறார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரன் நானும் சுந்தரி நீயும் சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை தேஜஸ்வினி. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக பிரபல சீரியல் நடிகர் வினோத் பாபு நடித்திருந்தார். மேலும் இந்த சீரியல் குடும்பம், காதல் மற்றும் அரசியல் பின்னணியை வைத்து உருவாகி இருந்தது. 2020ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த சீரியலின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வந்தார். அந்த வகையில் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் படிப்பறிவு இல்லாத கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த சீரியல் சமீபத்தில் தான் அறிமுகமானது ஆனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற தொடங்கியுள்ளது.
தேஜஸ்வினி தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாவதற்கு முன்னரே கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 2018ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான வீணா பொண்ணப்பாவுடன் பில் ஹிந்தி என்ற சீரியலில் நடித்துள்ளார். இதன் மூலம் சின்னத்திரைக்கு என்று கொடுத்த இவர் தற்பொழுது தமிழ், தெலுங்கு, கன்னடம் என மாறி மாறி நடித்த மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தேஜஸ்வினி கன்னட பிக்பாஸ் பிரபலம் அமர்தீப் சௌத்திரிவுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேஜஸ்வினியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். மேலும் திருமணம் எப்பொழுது என்று கேள்வியும் கேட்டு வருகிறார்கள்.