TRP-யில் விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ் சீரியல்கள்.!

zee-tamil
zee-tamil

தமிழ் சின்னத்திரையில் தொடர்ந்து பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் இந்த மூன்று தொலைக்காட்சிகளின் சீரியல் தான் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. அந்த வகையில் சன் டிவி தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்த நிலையில் விஜய் டிவியின் ஒரு சில சீரியல்கள் மட்டுமே முதல் ஐந்து ஐந்து இடத்தைப் பிடித்து வந்தது.

ஆனால் தற்பொழுது அதற்கும் ஆப்பு வைத்து ஜீ தமிழின் சீரியல்கள் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல், சுந்தரி, எதிர்நீச்சல் இந்த அனைத்து சீரியல்களும் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகின்றது. இப்படிப்பட்ட நிலையில் இதனை அடுத்து விஜய் டிவியின் சீரியல்கள் தான் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்த்து வந்தனர்.

என்னதான் சன் டிவி சீரியல்கள் டிஆர்பியில் முன்னணி வகித்து வந்தாலும் விஜய் டிவி சீரியல் தான் நெட்டிசன்களுக்கு மிகவும் பிடித்ததாக விளங்கியது. அந்த வகையில் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, மௌனராகம் உள்ளிட்ட சீரியல்கள் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இவ்வாறு டிஆர்பியை பொறுத்த வரை சன் மற்றும் விஜய் டிவி தான் முதல் இரண்டு இடங்களை பிடித்து வந்தது. ஆனால் தற்பொழுது விஜய் டிவி பின்னுக்கு தள்ளப்பட்டு ஜீ தமிழில் சீரியல்கள் டிஆர்பியில் இரண்டாவது இடத்தை பிடிக்க தொடங்கியுள்ளது.

கடந்த வார டிஆர்பி ரேட்டிங் வெளியாகி இருக்கும் நிலையில் அதில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஐந்து சீரியல்கள் விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதாவது ஜீ தமிழில் 6:30 மணி அளவில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பேரன்பு இந்த சீரியல் விஜய் டிவியின் சீரியலை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தினையும், இதனைத் தொடர்ந்து கார்த்திகை தீபம், மீனாட்சி பொண்ணுங்க, நினைத்தாலே இனிக்கும் என அடுத்தடுத்த ஜீ தமிழின் சீரியல்கள் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, சிறகடித்து பறக்க ஆசை, மகாநதி போன்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி உள்ளது.