பொதுவாக தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் சன் டிவிவிஜய் டிவிக்கு அடுத்ததாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள தொலைக்காட்சி தான் ஜீ தமிழ்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் இவர்கள் புதுமுக நடிகர், நடிகைகள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அந்த வகையில் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் சீரியல்தான் வித்யா நம்பர் 1.இந்த சீரியலில் மாடலாக தனது மீடியா பயணத்தை தொடங்கி சின்னத்திரையில் ஹீரோயினாக அசத்தி வரும் தேஜஸ்வினி கௌடா ஹீரோயினாக நடித்த வருகிறார்.
இவர் கன்னட சீரியல்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் அதன் பிறகு தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த சில சீரியல்களின் மூலம் பிரபலமடைந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் இதன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான தேஜஸ்வினி தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி பட்டி தொட்டியம் பிரபலமடைந்துள்ளார் தேஜஸ்வினி. பிறகு கேர் ஆஃப் அனுசியா என்ற தொடரில் நடித்து அசத்தியிருந்தார் சில வாரங்களுக்கு முன்பு ஜீ தமிழில் புதிதாக அறிமுகமான வித்யா நம்பர் 1 தொடரில் தேஜஸ்வினி ஹீரோயினாக நடித்து வருகிறார்.
புவியரசு என்ற தொடரின் ஹீரோ தற்பொழுது இந்த சீரியலில் இணைந்துள்ளார்.இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் இந்த சீரியலில் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் முன்பே கிடைத்திருந்தது அதன்படி ஜட்ஜாக பாக்யராஜ் நடிக்கும் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது.