இனி தான் ஆண்களுக்கு தலைவலியே.? இனி ரகளை தான் வீட்டில் சோறு கூட கிடைக்காது.! புலம்பும் கணவன்மார்கள்

zee tamil serial shooting start
zee tamil serial shooting start

தமிழ்சினிமாவில் ஒளிபரப்பப்படும் திரைப் படத்திற்கு இணையாக ரசிகர் கூட்டம் இருப்பது போல சின்னத்திரையிலும் இருக்கிறார்கள், சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கிறார்கள்.

அதுவும் சமீப காலமாக காதல் ரொமான்ஸ் என வேற ட்ராக்கில் சின்னத்திரை போய்க்கொண்டிருக்கிறது, இதற்கு முன் ஒளிபரப்பப்பட்ட சீரியலில் குடும்ப சண்டை மாமியார் கொடுமை இது போல்தான் ஒளிபரப்பப்பட்டது, ஆனால் தற்பொழுது கொஞ்சம் வித்தியாசமாக சினிமா போலவே காதல் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் சீரியலில் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் சன் தொலைக்காட்சி ,ஜீ தமிழ், கலர், விஜய்டிவி ஆகிய சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு புதிய சீரியலை ஒளிபரப்பி குடும்ப பெண்களை கவர்ந்து வருகிறார்கள். அதன் விளைவு சீரியல் பார்க்கும் குடும்ப பெண்கள் கணவன்மார்களை தவிக்க விட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது.

குடும்ப பெண்கள் சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சாப்பாடு போடு என்று கூறினாலும் அவர்களிடமிருந்து வரும் பதில் இருங்க இந்த சீரியலை பார்த்து விட்டு வருகிறேன் என்று தான் கூறுவார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அதனால் படப்பிடிப்பு மற்றும் சீரியல் படப்பிடிப்பு என அனைத்தும் தடை பெற்றது.

இந்த நிலையில் தமிழக அரசு தற்போது சீரியல்களை சில நிபந்தனைகளுடன் தொடங்கலாம் என அறிவித்தது, சீரியலில் குறைந்த ஆட்களை வைத்து சூட்டிங் செய்யவேண்டுமென கண்டிஷன் போட்டுள்ளார்கள். இந்த நிலையில் புதிய எபிசொட்டை ஒளிபரப்பப் போவதாக அனைத்து தொலைக்காட்சியும் அறிவித்து வருகிறார்கள் இதைப்பார்த்த கணவன்மார்கள் இனி சாப்பாடு கிடைக்காதே டிவி யை விட்டு வரமாடலே என புலம்பி வருகிறார்கள்.