முக்கிய சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட ஜீ தமிழ்.. இது தான் கிளைமேக்ஸ் காட்சியா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

zee tamil serial: சின்னத்திரையில் உள்ள பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொணடு தொடர்ந்து ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி சீரியல்களை போலவே ஜீ தமிழ் சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அப்படி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முக்கியமான சீரியல்களில் ஒன்றான மீனாட்சி பொண்ணுங்க சீரியல் விரைவில் நிறைவடைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் ஆரியன் சமீபத்தில் இந்த செய்தியை உறுதி செய்துள்ளார். தற்பொழுது மீனாட்சி பொண்ணுங்க சீரியல் கிளைமாக்ஸ் சூட்டிங் நடைபெற்றது முடிந்துள்ளது.

zee tamil serial
zee tamil serial

எனவே கடைசி நாள் ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தார். அப்படி வெற்றி கதாபாத்திரத்தை நான் மிஸ் செய்வேன் என பதிவிட்டிருந்தார்.

தற்பொழுது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 மணிக்கு மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் கிளைமேக்ஸ் காட்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பல ரசிகர்கள் வருத்தத்துடன் தங்களது பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்.