பிக்பாஸ் சீசன் 6 -ல் கலந்து கொள்ளும் ஜீ தமிழ் சீரியல் நடிகை.? இவர் இருக்கிற இடம் எப்போதுமே பிரச்சனை தான்..

bigboss
bigboss

வெள்ளித்திரையில் எப்படி டாப் நடிகர்கள் முதலிடத்தை பிடிக்க மோதிக் கொள்கிறார்களோ அதே போல சின்னத்திரை தொலைக்காட்சி டிஆர்பிஎல் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க தொடர்ந்து மோதிக் கொள்கிறது இதனால் ஒவ்வொரு தொலைக்காட்சியையும் மக்களை கவர புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோர்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில்  விஜய் டிவி தொலைக்காட்சி சொல்லவே தேவையில்லை தொடர்ந்து புதிய புதிய சீரியல்களை இறக்குவதோடு மட்டுமல்லாமல் அதிக ரியாலிட்டி ஷோர்களை கொண்டு வரும் டிவி இது தான். வகையில் இப்பொழுது ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் வருகின்ற அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை களம் இறக்குவதால் விஜய் டிவி TRP – ல் இன்னும் முன்னேறும் என தெரிய வருகிறது பிக்பாஸ் 6 வது சீசனை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார் அதற்காக அவருக்கு சம்பளமாக 75 கோடி பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தடவை பிக்பாஸ் சீசன் 6ல் யார் யார் கலந்து கொள்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர் ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சில பெயர்கள் மட்டும் தொடர்ந்து அடிபடுகின்றன அந்த வகையில் ராக்ஷன், டிடி, ஜிபி முத்து ஆகியோர்கள் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா 2 சீரியல் வெகு விரைவிலேயே முடிவுக்கு வர இருக்கிறது இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆயிஷா பிக்பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரை நாம் பொறுத்திருந்து தான் ஆக வேண்டும்..

ayesha
ayesha