இதன் காரணத்தினால் தான் என்னுடைய திருமணம் அவசர அவசரமாக நடந்தது என உண்மையை உடைத்த நட்சத்திரா.!

nakshatra

சமீப காலங்களாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சின்னத்திரை நடிகைகள் தாங்கள் நடிக்கும் முதல் சீரியலிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விடுகிறார்கள் மேலும் சோசியல் மீடியாவிலும் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் ரசிகர்களிடம் கலந்துரையாடுவது போன்றவற்றை செய்து மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது  பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் எனது திருமணம் ஒரே நாளில் திட்டமிடப்பட்டு மிகவும் அவசர அவசரமாக நடைபெற்றது மேலும் பிளவுஸ் தைக்க கூட நேரம் இல்லை அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய நண்பர்கள் கூட திருமணத்திற்கு வரவில்லை என கூறி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்து சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த சீரியல் தான் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் நடித்த ஹீரோயின் முதல் வில்லி வரை அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தார்கள்.மேலும் ஹீரோயினாக வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை நட்சத்திரா.

தற்பொழுது இவர் ‘வள்ளி திருமணம்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் மேலும் இவர் சீரியலில் பணிபுரிந்து வரும் விஷ்வா என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெறும் எனவும் சோசியல் மீடியாவில் வைரலானது. இதனைப் பற்றி நட்சத்திரா பெரிதாக சொல்லாமல் இருந்து வந்த நிலையில் பிறகு ரசிகர்கள் அனைவருக்கும் திருமணம் செய்ய இருப்பது உண்மைதான் என உறுதி செய்தார்.

இப்படிப்பட்ட நிலையில் திடீரென யாருக்கும் சொல்லாமல் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நட்சத்திரா தனது திருமணத்தில் நடந்ததை பற்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தான் தாத்தா வீட்டில் தான் சின்ன வயதிலிருந்தே வளர்ந்து வந்ததாகவும் திடீரென்று தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தாத்தா என்னுடைய திருமணத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டதால் திருமணம் செய்ய முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் பிளவுஸ் தைக்க கூட நேரமில்லை என்றும், நெருங்கிய நண்பர்களை கூட அழைக்க முடியவில்லை எனவும் கூறி உள்ளார் பிறகு விஷ்வா மற்றும் நட்சத்திரா இவர்களின் குடும்பத்தில் இருப்பவர்கள் முக்கியமானவர்கள் மட்டும் குலதெய்வ கோயிலுக்கு சென்று அவர்கள் முன்னிலையில் திருமணம் நடந்ததாகவும் கூறியுள்ளார்.