ஜீ தமிழ் தொலைக்காட்சியிலிருந்து vj அர்ச்சனாவைத் தொடர்ந்து விஜய் டிவிக்கு வந்த பிரபல காதல் ஜோடி!! வைரலாகும் புகைப்படம்..

vijay-and-zee-tamil-logo-3-2
vijay-and-zee-tamil-logo-3-2

விஜய் டிவி ரசிகர்களை கவரும் வகையில் பல ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்தவகையில் நாம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் காதலர் தினத்தன்று காதலே காதலே என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை பிக்பாஸ் சீசன் 4ரில் கலந்துகொண்ட அர்ச்சனா தொகுத்து வழங்கவுள்ளார்.  இதில் சிறப்பு விருந்தினராக ஆர்யா பங்கு பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல சின்னத்திரை ஜோடிகள் பங்கு பெற்றுள்ளார்கள். தற்பொழுதுள்ள ஜோடிகளில் ரசிகர்களுக்கு பிடித்தவர்களாக வலம் வருபவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா.

இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது  ஜீ தமிழில் மதன்,ரேஷ்மா இவர்கள் தான்  ட்ரெண்டிங்காக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் ஜீ தமிழில்  பணியாற்றி வரும்  மதன் மற்றும் ரேஷ்மா விஜய் டிவியில் காதலே காதலே நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள்.

காதலே காதலே சூட்டிங் போது இருவரும் எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

reshma1
reshma1