தற்போதெல்லாம் திரைப்படங்களை விடவும் சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. நாள்தோறும் புதிய எபிசோடுகளை பார்ப்பதனாலோ என்னவோ அதற்கு மட்டும் ஒரு தனி மவுசு உருவாக்கி விடுகிறது. அதோட சீரியலில் நடித்து வருபவர் எளிதில் ரசிகர்கள் மனதை கவர்ந்து விடுகிறார்கள். அந்த வகையில் முக்கிய தொலைக்காட்சி ஒன்று 1361 எபிசோடுகளை தாண்டி ஒரு சீரியலை ஒளிபரப்பி வருகிறது.
1362 எபிசோடுகள் ஒளிபரப்புவது சாதாரண விஷயமல்ல அது வேறு எந்த சீரியலும் இல்லை ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் தான். இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஷபானா மற்றும் கார்த்தி இவர்களின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவர்ந்தது.
பிறகு திடீரென்று நடிகர் கார்த்திக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்ததால் அவர் செம்பருத்தி சீரியலில் நடிப்பதை நிறுத்தினார். அவர் விலகியதும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிதாகப் பார்க்க படவில்லை. இவருக்கு பதிலாக மற்றொரு நடிகர் வந்தாலும் அந்த நடிகரை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எனவே இந்த சீரியலை அநியாயத்துக்கு கதை சம்பந்தமே இல்லாத படி நீண்டு கொண்டே போவதால் ரசிகர்கள் மத்தியில் விமர்சன சீரியலாக மாறியது. இதன் காரணமாக ஜீ தமிழ் டிஆர்பி-யில் பெரிதும் அடிவாங்கியது சொல்லப்போனால் இந்த சீரியலின் ஆரம்ப காலகட்டத்தில் ஜீ தமிழ் டிஆர்பி-யில் முன்னணி வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 1,2020 அன்று இந்த சீரியலில் இருந்து கார்த்திக் ராஜா விலகியபோது இந்த சீரியல் முடித்திருந்தால் கூட ஓரளவிற்கு நல்லா இருந்திருக்கும். ஆனால் தற்பொழுது ரசிகர்கள் தொடர்ந்து ஏண்டா இப்படி பண்றிங்க சீக்கிரமா இந்த சீரியலை முடியிங்க என்று கூறும் அளவிற்கு தற்பொழுது இருந்து வருகிறது.