கிளைமாக்ஸ் நெருங்கும்நேரத்தில் பிரபல திரைப்பட காமெடி நடிகரை களம் இறக்கும் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல்.! இது என்ன புதிய டுவிஸ்டா இருக்கு..

sembaruthi-2
sembaruthi-2

தற்போது சின்னத்திரையில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான செய்தியாக ஒளிபரப்பு வருகிறார்கள். மேலும் 2K கிட்ஸ்களை கவர வேண்டும் என்பதற்காக ரொமான்டிக்கான காட்சிகள் இருக்கும் படியான சீரியல்களையும், தொடர்ந்து புதுமுக இளம் நடிகர் நடிகைகளையும் அறிமுகப்படுத்தி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியல் ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தொலைக்காட்சிகளின் சீரியல்களையும் ஓவர் டேக்ஸ் செய்து டிஆர்பி-யில் முன்னணி வகித்தது. இந்த சீரியலை ஹீரோவாக நடித்து வந்த கார்த்திக் விலகிய பிறவி இந்த சீரியலின் டிஆர்பி மொத்தமாக சரிந்தது.

தற்பொழுது 1400 எபிசோடுகளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிய வைப்பது தகவல் வெளிவந்துள்ளது.ஷபானா,அக்னி, பிரியா ராமன், ஊர் வம்பு லட்சுமி என பலரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இந்த சீரியலில் தற்பொழுது அகிலாண்டேஸ்வரி புவனேஸ்வரி வீட்டிலிருந்து வர புவனேஸ்வரி அகிலாண்டேஸ்வரியாக நடித்த வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் 10 வருடங்களுக்கு முன்பு புவனேஸ்வரி விட்டு பிரிந்து சென்ற அவருடைய கணவர் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

அந்த வகையில் இந்த கேரக்டரில் பிரபல நடிகர் ரோபோ சங்கர் தான் நடிக்க இருக்கிறார். சாமியார் வேடத்தில் வீட்டிற்கு வரும் ரோபோ சங்கர் ஒரு கட்டத்தில் நான் தான் உன்னுடைய புருஷன் என சாமியார் கிட்ட போய் கலைக்க ஒன்றும் புரியாமல் அகிலாண்டேஸ்வரி அப்படியே இருக்கிறார்.

பிறகு ரோபோ சங்கர் இது புவனேஸ்வரி இல்லை என தெரியும் புருஷனாக நெருங்கி நெருங்கி சென்ற அன்பு தொல்லை செய்ய ஒரு கட்டத்தில் புவனேஸ்வரிடம் விஷயத்தை சொல்ல பின்னர் அகிலாண்டேஸ்வரி வீட்டுக்கு செல்கிறார் ரோபோ சங்கர். அங்கு அவர் அகிலாண்டேஸ்வரி ஆக நடிக்க புவனேஸ்வரிடம் நெருக்கம் காட்ட இதனால் வீட்டுக்குள் பல பிரச்சனைகள் நடக்கிறது.

robo sangar
robo sangar

இவ்வாறு செம்பருத்தி சீரியல் காமெடி கலாட்டாவாக ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் வனஜாவுக்கும் ரோபோ சங்கர் லவ் டார்ச்சர் கொடுக்க இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு கிளைமாக்ஸ் நெருங்குவதால் இந்த சீரியலினை மிகவும் கலகலப்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என படக்குழுவினர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்கள்.