என்னை அசிங்கப்படுத்திட்டாங்க என கூறி அதிர்ச்சியடைய வைத்த செம்பருத்தி சீரியல் நந்தினி.!

Nanthini

தற்பொழுதெல்லாம் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பும் வரும் நிலையில் ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று 1000 எபிசோடுகளை தாண்டியும் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகை ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று டிஆர்பி-யில் அடித்து நொறுக்கிய சீரியல் தான் செம்பருத்தி.

இந்த சீரியலில் நடித்து வந்த அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து. மிகவும் நன்றாக ஓடிக் கொண்டிருந்த இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்க வந்தார் அருண் திடீரென்று சில காரணங்களினால் விலகினார். அதன் பிறகு இந்த சீரியலின் டிஆர்பி சரியா தொடங்கியது.

அருணுக்கு பதிலாக கார்த்திக் கதாபாத்திரத்தில் வேறு நடிகரை அறிமுகப்படுத்தி தொடர்ந்து ஒளிபரப்பி வந்தார்கள். இவ்வாறு இவர்கள் தொடர்ந்து இந்த சீரியலினை ஒளிபரப்பி வந்தாலும் பெரிதாக பிரபலமடையவில்லை இருந்தாலும் 1000 எபிசோட்களை தாண்டும் இந்த சீரியலை ஒளிப்பரப்பி வந்தார்கள்.

இந்நிலையில் தற்பொழுது இந்த சீரியல் முடிந்துள்ள நிலையில் வெற்றிவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த வகையில் இந்த சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை மௌனிகா. இவர் நந்தினி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இவரின் சிறந்த நடிப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்நிலையில் தற்பொழுது நடந்த வெற்றி விழாவில் தன்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள் என ஜீ தமிழ் மீது புகார் அளித்துள்ளார். அதாவது ‘செம்பருத்தி சீரியலில் தன்னுடைய பெஸ்ட் கொடுத்தேன் ஆனால் எனக்கு ஜீ தமிழ் சீரியல் திருப்தி தரவில்லை, மெயின் ரோலில் நடித்த நடிகையை மட்டும் கொண்டாடுகிறார்கள். எனக்கு எந்த மரியாதையும் கொடுக்க வேண்டும் என தோன்றவில்லையா ஜீ தமிழ்’.

என்னை எதற்கு அழைத்தீர்கள், எனக்கு மொமெண்டோ எங்கே? என்னை இன்சல்ட் செய்து விட்டீர்கள். சோகமாக தான் இருக்கிறேன், மக்கள் என்னை ஏற்றுக் கொண்டு என்னை கொண்டாடுகிறார்கள், அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

Nanthini
Nanthini