சொன்ன மாதிரியே சவாலில் ஜெயிச்சிட்டா என சீதாவால் பீதியான மகா.! வாந்தி எடுத்ததற்கான காரணம் இது தான்..

seetha-raman
seetha-raman

தமிழ் சினிமாவில் தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் நம் பலர் வாழ்கையோடு பின்னிப்பிணைந்திருக்கும் அசத்தலான சீரியல்களும் இருந்த வருகிறது அப்படி இருந்து வரும் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வர தொடங்கி விடுகிறது.

மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் பிரபலங்களும் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள் அப்படி தற்பொழுது ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்த்து வரும் சீரியல்களில் ஒன்றுதான் சீதாராமன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினம் இரவு 7:30 மணி அளவில் சீதாராமன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்பொழுது இந்த சீரியலில் வீட்டிற்கு வந்த ராம் சீதாவுக்கு குல்பி வாங்கி வந்து கொடுத்த நிலையில் சீதா ராமுக்காக தைத்த போலீஸ் டிரசை எடுத்துக் கொடுத்து சர்ப்ரைஸ் செய்கிறாள். இதனை அடுத்து ராம் போலீஸ் டிரஸ் போட்டு வந்து நடந்து காட்ட அந்த சமயம் ராமின் மாமா துரை இதனை பார்த்துவிட்டு பயந்து ஓட சீதா இதை பார்த்து சிரிக்கிறாள்.

இதனை அடுத்து மறுநாள் சீதா சாப்பிட்ட குல்பி செட்டாகாமல் வாந்தி எடுக்க இதனை பார்த்த மகா அதிர்ச்சி அடைகிறார். ஏனென்றால் இதற்கு முன்பு சீதா ராமனின் குழந்தையை வயிற்றில் வைத்துக் கொண்டு வாந்தி எடுப்பேன் என சவால் விட்டிருந்த நிலையில் இது மகாவுக்கு ஞாபகம் வருகிறது எனவே இதனால் டென்ஷன் ஆகிறார்.

இதனை அடுத்து சீதாவிடம் வந்து என்ன ஆச்சு என கேட்காமல் சாதாரணமாக உங்கள் பையன் கிட்டையே கேளுங்க என்று சொல்ல மகாவுக்கு இன்னும் டென்ஷன் அதிகமாகிறது பிறகு ராமனிடம் சென்று என்ன ஆச்சு என கேட்க அவனும் குல்பியை மனதில் வைத்துக் கொண்டு நான் தான் காரணம் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

அதன் பிறகு மீரா வந்து நீ பெரிய ஆள் தான் சொன்ன மாதிரியே செஞ்சிட்டா என சொல்லி சந்தோஷப்பட சீதா இது குல்பியால் வந்த வாந்தி என்ற உண்மையை உடைக்கிறாள் மேலும் டாக்டர் வீட்டுக்கு வந்து சீதாவை பரிசோதனை செய்ய மகாவுக்கு பீதியாகிறது.