தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவிக்கு அடுத்ததாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள தொலைக்காட்சி தான் ஜீ தமிழ்.
ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஜீ தமிழ் சீரியலில் நடித்து வந்த ஹீரோயின் ஒருவர் திடீரென விலகி உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. அதாவது ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் ஒன்று தான் கன்னத்தில் முத்தமிட்டால்.
இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்பொழுது ஆதிரா கழுத்தில் தாலி கட்டப் போவது யார என இந்த வார எபிசோடில் பரபரப்பான திருமண காட்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது. சமீபத்தில் இந்த சீரியல் 100 எபிசோடுகளை கடந்த நிலையில் சீரியல் குழுவினர்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
மேலும் இது குறித்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது. மேலும் அந்த புகைப்படத்தில் ஹீரோயின் மனுஷா திருமண உடையில் இருந்தது தெரியவந்தது. எனவே இந்த திருமணம் எபிசோடுகளை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வந்த நிலையில் தற்போது ஷாக்கிங் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது இந்த சீரியலில் ஹீரோயின் ஆதிரா ரோலில் நடித்து வந்த மனுஷா ஜித் தற்பொழுது சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அதை இவரே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இதற்கு மேல் ஆதிரா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.