பாரதிகண்ணம்மா அஞ்சலி நடித்து வரும் அமுதாவும் அன்னை லக்ஷ்மியும் சீரியலின் கதை இதுதான்.! திரைப்படத்தையே ஓவர்டேக் செய்து விடும் போல..

amuthavum-annalakshmiyum
amuthavum-annalakshmiyum

தற்பொழுதெல்லாம் வெள்ளித்திரை நடிகர் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் சின்னத்திரை நடிகர்,நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  அதுவும் முக்கியமாக சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு கவர்ச்சி காட்டுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த சீன்கள் பெரும்பாலும் சீரியலில் இல்லை என்றாலும் தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தங்களுக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்கிறார்கள்.  அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் அஞ்சலி என்ற பெயரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் கண்மணி மனோகரன்.

இந்த சீரியலின் கண்ணம்மாவின் தங்கையாக நடித்து வந்தார். பிறகு சில காரணத்தினால் சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து விலகினார்.  பிறகு ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் குயின் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து ஜீ தமிழில் அறிமுகமாகியிருக்கும் அமுதாவும் லக்ஷ்மியும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் ப்ரோமோ வெளிவந்த நிலையில் விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.  அந்தப் ப்ரோபோவில் சிறுவயதிலேயே அம்மாவை இழந்த அமுதா தன் குடும்பத்திற்காக படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்கிறார். படிப்பறிவு இல்லாத காரணத்தினால் பல அவமானங்களை சந்திக்கும் அமுதா கட்டினால் ஒரு வாத்தியார் அது தான் கல்யாணம் கட்டிக்கணும்னு என முடிவு செய்கிறார்.

இவரைப் போலவே இன்னொரு தரும் இன்னொரு கனவோடு காத்திருக்கிறார்.  யார் என தெரிஞ்சிக்க நாமும் காத்திருக்கலாம் டுவிஸ்ட்டோடு அந்த ப்ரோமோ முடிந்தது. தற்பொழுது இரண்டாவதாக வெளிவந்த அதில் பதில் கிடைத்துள்ளது. அதாவது வாத்தியார் குடும்பம் என பெருமையாக வாழ்ந்து வந்த அன்னலட்சுமி குடும்பத்தில் எதிர்பாராத சூழ்நிலையிலைகளால் சரிந்த போகிறது.

இதனால் தன்னுடைய மகனை வாத்தியார் ஆகிய குடும்ப பெருமையை மீட்டெடுக்க ஆசைப்படுகிறார் அன்னலட்சுமி.  செந்தில் தனது அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லிவிட்டு  பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக வேலை செய்து வருகிறார்.  இவ்வாறு மற்றவர்கள் கனவுக்காக மனசுல இருக்க வலியை மறைச்சி தானே ஆகணும் ஆனால் எவ்வளவு நாளைக்கு என அதோடு  இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.