தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ந்து போட்டிபோட்டுக்கொண்டு தரமான கதை உள்ள நல்ல சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.
மற்ற அனைத்து தொலைக்காட்சிகளும் ஜீ தமிழ் டப் கொடுத்து வருகிறது. அதோடு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் TRP-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் சீரியல் பூவே பூச்சூடவா.
பொதுவாக ஒரு சீரியல் ஆயிரம் எபிசோடுகளை தொட்டு விட்டால் மிகவும் போர் அடித்து விடும் எனவே ரசிகர்கள் விரைவில் இந்த சீரியலை முடித்து விடுங்கள் என்று கூறுவார்கள். ஆனால் பூவே பூச்சூடவா சீரியல் அப்படி கிடையாது ஆயிரம் எபிசோடுகளை தாண்டினாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்தவகையில் இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு புதிதாக அறிமுகமானவர் தான் நடிகை ரேஷ்மா முரளிதரன். இதுதான் இவரின் முதல் சீரியலாக இருந்தாலும் ரசிகர்கள் இவருக்கு பெரும் ஆதரவை அளித்து வருகிறார்கள்.
அதோடு இவர் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள் வெளியிடுவது மற்றும் ரசிகர்களிடம் லைவ் சாட்டில் பேசுவது போன்றவற்றை செய்வதால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.இந்நிலையில் பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு பிரபல நடிகை ஒருவர் மாறி உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அது வேறு யாரும் கிடையாது ரேஷ்மா தான். கலர்ஸ் தமிழில் புதிதாக அபி டைலர் என்ற தொடரில் ரேஷ்மா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அந்த வகையில் கலர்ஸ் தமிழில் இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
ப்ரோமோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.