உலகநாயகன் கமல்ஹாசன் எப்பொழுதுமே வித்தியாசமான மற்றும் புதுமையான படங்களை கொடுக்கக்கூடிய ஒரு ஹீரோ இவர் இயக்குனர் சங்கருடன் கைகோர்த்து நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் அந்த வகையில் மீண்டும் ஒருமுறை ஷங்கர் உடன் கைகோர்த்து நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2..
இந்த படத்தின் படபிடிப்பு 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டிருந்தாலும் சில பிரச்சனைகள் காரணமாக அப்பொழுது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது அதன் பிறகு ஷங்கரும் கமலும் ஆளுக்கு ஒரு மூலையில் போனாதால் இந்தியன் 2 படத்தை தொடர முடியாமல் போனது ஒரு வழியாக இந்த படம் அக்டோபர் மாதம் மீண்டும் சூட்டிங் கோலாகலமாக தொடங்கியது.
இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ராகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது படத்தின் பாதி படபிடிப்பு ஏற்கனவே வெற்றிகரமாக முடிந்த நிலையில் மீதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டது வருகிறது.
இப்படி ஒரு சூழலில் மற்றொரு திறமை வாய்ந்த ஒரு நடிகரை தட்டி தூக்கி உள்ளது இந்தியன் 2 திரைப்படம் அந்த நடிகர் வேறு யாரும் அல்ல.. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் தான்.
இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கிறேன் என பதிவிட்டுள்ளார் மேலும் தி லெஜன்ட் கமலஹாசன் ஜி என குறிப்பிட்டு அவர் பதிவு போட்டு உள்ளார். இதோ யுவராஜ் சிங்கின் தந்தை யோக் ராஜ் இந்தியன் 2 திரைப்படம் நடிக்க மேக்கப் போட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..