சைலண்டாக வலிமை திரைப்படத்தின் அப்டேட்டை தட்டிவிட்ட யுவன்சங்கர்ராஜா.. கேக் வெட்டி பட்டாசு வெடிக்க ரெடியாகும் ரசிகர்கள்.!

ajith

தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.

மேலும் ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்தபோது அஜீத் பைக்கில் வீலிங் செய்த புகைப்படம் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் வலிமை படத்தின் அப்டேட் கொடுங்கள் என இணையதளத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களிடம் கேட்டு வந்தார்கள்.

இந்நிலையில் அந்த படத்தில் இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா ஒரு அப்டேட்டை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் அந்த அப்டேட் என்னவென்றால் அண்மையில் ஒரு ரசிகர் வலிமை படத்தைப் பற்றிய அப்டேட் கொடுங்கள் என கேட்டிருக்கிறார்.

அதற்கு யுவன் ஷங்கர் ராஜா நீயுயர் அன்று வலிமை அப்டேட் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் யுவன்ஷங்கர் ராஜாவுக்கு நன்றி கூறி வருவது மட்டுமல்லாமல் இவர் பகிர்ந்த தகவலை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

ajith