தன்னுடைய இசையினால் ஒட்டுமொத்த மக்களையும் ஆட்சி செய்து வருபவர் தான் யுவன் சங்கர் ராஜா.இவருடைய 42 வது பிறந்தநாள் நேற்று மிகவும் கோலாகலமாக கொண்டாடினார். இதன் காரணமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையில் கடந்த 25 ஆண்டுகளாக ஏராளமான ஹிட் பாடல்கள் கொடுத்து அனைவரையும் மகிழ்வித்த யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள்.
அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக ட்விட்டரில் #AsKU1 என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார் குறித்த கேள்வி எழுப்பினார் அதற்கு இருவரையும் குறித்த சுவாரசியமான தகவலை யுவன் சங்கர் ராஜா அவர்கள் பகிர்ந்துள்ளார்.
அதாவது அஜீத் குமாரை பற்றி பேசிய பொழுது, இத்தனை வருடங்களாக அவருடன் இணைந்து பணியாற்றுவது அற்புதமான நினைவுகளாக இருக்கிறது, ஒவ்வொரு படம் முடிந்த பிறகும் அழைத்து பாடல்களும் பின்னணி செய்யும் சிறப்பாக உள்ளதாக பாராட்டுவார், அற்புதமான மனிதர் தனிப்பட்ட முறையில் அவரோடு பணியாற்றுவது மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் அவர்களை பற்றி கேட்ட பொழுது, தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன் அவருடனான சந்திப்பு மிகவும் அற்புதமானது.. இனிமையான மனிதர் அவர் திரைப்படங்கள் குறித்து நிறைய பேசுவோம் மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆன சமயம் என்பதால் அது குறித்தும் பேசினார் குறிப்பாக அவரது மகன் என்னுடைய வெறித்தனமான ரசிகன் என அவர் சொன்னது என்னால் மறக்கவே முடியாது அது எனது மனதை தொட்ட ஒரு தருணம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஏராளமான கேள்விகளுக்கு பதில் அளித்த யுவன் சங்கர் ராஜா தற்பொழுது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே திரைப்படத்தில் பணியாற்றுவது குறித்த சுவாரசியமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் தற்பொழுது யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுடன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
#AskU1 pic.twitter.com/MgIKCzoNYY
— Raja yuvan (@thisisysr) August 31, 2022