சினிமா உலகிற்கு ஆண்டுதோறும் புதுமுக இசையமைப்பாளர்கள் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது ஆனால் அவர்களெல்லாம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்களா என்றால் அது கேள்விக்குறிதான் சிறந்த படைப்புகளை ஓரிரு படங்களில் கொடுத்தால் மட்டும் கொடுத்தால் போதது தொடர்ந்து செய்தால் மட்டுமே ரசிகர்கள் கொண்டடுவார்கள்.
அதை காலம் காலமாக கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பவர்கள் மட்டுமே சினிமா உலகில் நீண்ட தூரம் ஓட முடியும் அதை செய்து காட்டியவர் தான் இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இவர் இளம் வயதிலேயே சினிமா உலகில் இசையமைக்க வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அப்போதிலிருந்து தற்போது வரையிலும் அஜித் விஜய் போன்ற டாப் நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்த தனது திறமையை வெளிக்காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கூட அஜித்துடன் மீண்டும் ஒருமுறை இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் இசையமைத்து வருகிறார். அஜித்தின் தீவிர ரசிகர் யுவன் சங்கர் ராஜா என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதையும் தாண்டி அவ்வபொழுது படங்களை தயாரித்தும் வெற்றி கண்டு வருகிறார்.
இப்படி சினிமா உலகில் எல்லா இடத்திலும் கால் தடம் பதித்து வரும் இவர்.சினிமா நேரம் போக தனது மனைவியுடன் நிகழ்ச்சி மற்றும் வெளியே செல்லும் போது புகைப்படங்களை எடுத்த வருவதை வழக்கமாக வைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் நடிகராகவும், பாடகராகவும் வலம் வரும் கவிஞர் சினேகன் என்ற சீரியல் பிரபலம் கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுடன் யுவன் சங்கர் ராஜா மற்றும் அவரது மனைவி ஆகியோர் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது இதற்கு முன்பு சினேகன் தனது மனைவியுடன் இளையராஜாவிடம் ஆசீர்வாதம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.