Thalapathy 68 Movie Update: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கல்லூரி விழாவில் பங்கேற்ற பொழுது தளபதி 68 படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்த வருகின்றனர். நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. சென்னையில் உள்ள நேரு ஸ்டுடியோவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 68வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்த படத்தினை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதற்காக நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய மூவரும் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு சென்று உள்ளனர்.
சில நாட்களாக தளபதி 68 பட அப்டேட்டுகளை வழங்கி வந்த இயக்குனர் வெங்கட் பிரபு இன்று விடுமுறை என நக்கலாக கூறியுள்ளார். தளபதி 68 படத்தில் டி ஏஜிங் பயன்படுத்த இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் அதற்கான 3d செய்யும் போட்டோவையும் வெங்கட் பிரபு வெளியிட்டு இருந்தார்.
மேலும் தளபதி 68 படத்தில் நடிகர் விஜய் மிகவும் எளிமையான தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தெரியவந்திருக்கும் நிலையில் இதனை அடுத்து சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் முதல் பாடல் தர லோக்கலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.