தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா இவர் தன்னுடைய பதினாறு வயதிலேயே சரத்குமார் நடிப்பில் வெளியாகி அரவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் யுவன்சங்கர்ராஜா இசையை கேட்க மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது அந்த வகையில் இன்னும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடலை தான் பல ரசிகர்கள் ரசித்து கேட்டு வருகிறார்கள் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கிவரும் ரஜினி மற்றும் கமலின் படங்களுக்கு இது வரை யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க வில்லை என்பதுதான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சித் தகவலாக இருக்கிறது.
நடிகர் கமலஹாசன் யுவன் சங்கர் ராஜாவின் தந்தையான இளையராஜா அவர்களுடன் நீண்டகாலம் நட்புடன் இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் அது மட்டும் இல்லாமல் கமல் மற்றும் இளையராஜா இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் ஒன்றாக பணியாற்றினார்கள் ஆனால் இன்னும் யுவன் சங்கர் ராஜாவும் அவர்களுடன் கமல் ஒரு படம் கூட செய்யவில்லை என்பது வருத்தத்தை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்களுடன் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் யுவன்சங்கர்ராஜா இணைய இருந்தார் சிறுத்தை சிவா இயக்கிய அந்த திரைப்படத்தில் முதன்முதலில் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்கப் போகிறார் என பலரும் கூறிய நிலையில் கடைசி நேரத்தில் டி இமான் இசை அமைப்பாளராக களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இதுவரை உச்ச நட்சத்திரங்களாக விளங்கிவரும் கமல் மற்றும் ரஜினி அவர்களுக்கு இசை அமைக்காதது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.