தளபதி விஜய் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது அதனால் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் ஏப்ரல் 14ஆம் தேதி யாஷ் நடிப்பில் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் கேஜிஎப் இரண்டாவது பாகம் வெளியாக இருக்கிறது.
இரண்டு திரைப்படமும் ஒரே நேரத்தில் மோதிக்கொள்ள இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள் இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் யோகிபாபு செல்வராகவன் பூஜா ஹெக்டே ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அதேபோல் பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது அதனால் ப்ரோமோஷன் வேலைகளில் மிகவும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
பீஸ்ட் திரைப்படத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு பாடலும் வெளியாகி ரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது இந்த நிலையில் முதலில் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு அரபிக்குத்து வெளியாகியது அதனைத் தொடர்ந்து தற்போது ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
அரபி குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார் அனிருத் இசையமைத்திருந்தார் இந்த நிலையில் ஜாலியோ ஜிம்கானா பாடலை விஜய் அவர்கள் பாடியுள்ளார் அப்படியிருக்கும் நிலையில் அரபிக் குத்து பாடலுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ரீல் செய்து வீடியோவை வெளியிட்டு வந்தார்கள்.
அதேபோல் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கும் ரீல் செய்த வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள் ரசிகர்கள் அந்த வகையில் தற்பொழுது யுவன்சங்கர்ராஜா அவர்களும் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டே வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
Yuvan’s #JollyOGymkhana
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 28, 2022