பீஸ்ட் பட பாடலை பங்கமாக கலாய்த்த யுவன் சங்கர் ராஜா.! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ.!

vijay 02
vijay 02

அனிருத் எப்பொழுது எந்த பாடலை இசை அமைத்தாலும் அது எங்கிருந்து திருடப்பட்டு இருக்கும் என்று சந்தேகத்துடன் நெட்டிசன்கள் அந்த பாடலை வெளியான நாள் முதல் ஆராய தொடங்கி விடுகிறார்கள் . அதேபோல் இசை திருடப்பட்டது தொடர்பாக நிறைய பிரச்சினைகளிலும் அனிருத் சிக்கியுள்ளார், இதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி மிகப் பிரபலமடைந்த பீஸ்ட் திரைப்படத்தில் வரும் அனிருத் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ட்ரெண்டிங்தான் அரபிக் குத்து, ஜாலியா ஜிம்கானா, பீஸ்ட் மூட் ஆகிய பாடல்கள் இன்றளவும் இன்ஸ்டாவில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

என்னதான் அனைவரும் இவர் எங்கேயோ இசையை திருடி விட்டார் என்று கூறினாலும் அவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் ட்ரெண்டிங்கில் இருக்கும், அதுதான் அனிருத்தின் சிறப்பம்சம். மேலும் இவர் இசையமைக்கும் படங்கள் அனைத்தும் பெரிய பெரிய கதாநாயகர்களை கொண்டு எடுக்கப்பட்ட படங்கள்தான்.

இப்படி எல்லாம் இருக்க தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் வரும் பீஸ்ட் மோட் என்னும் பாடல் ஆங்கில பாடலிலிருந்து திருடப்பட்டது என்று நெட்டிசன்கள் அனைவராலும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக யுவன் சங்கர் ராஜா, துபாய் சுற்றுப்பயணம் சென்ற வீடியோவுடன் அப்பாடலை இணைத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டடு பேசும் பொருளாகி வருகிறது.

இது அனிருத்திற்கு மிகப்பெரிய பங்கமான கலாய் ஆகும். யுவன் சங்கர் ராஜாவிற்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் அவரால் வெளியிடப்படும் சிறு புகைப்படமே வைரலாகும் இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோவானது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சில நெட்டிசன்கள் அனிருத்தை இதை வைத்து மீம்ஸ் கிரியேட் பண்ணி கலாய்த்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்