யுவன் பாட்டை மொக்கை என மரணமாய் கலைத்த பிரபல நடிகர்.! அதன் பிறகு நடந்தது என்ன தெரியுமா.?

yuvan-

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிரேம்ஜி. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் யுவன் சங்கர் ராஜா இசை அமைந்த ஒரு பாடல் மொக்கை என்று கலாய்த்து விமர்சித்துள்ளார்.

இயக்குனர் ஜே எஸ் சுரேஷ் இயக்கியுள்ள ஜூனியர் சீனியர் என்ற திரைப்படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் நடிகர் ரவிச்சந்திரனின் மகனான அம்சவர்தன் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் மலேசியாவில் முழுக்க முழுக்க படம் எடுக்கப்பட்டது. இரண்டாவது முறையாக இயக்குனர் சுரேஷ் இயக்கிய படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பிரேம்ஜி அமரனும் யுவன் சங்கர் ராஜாவும் சகோதரர்கள் என்பதால் வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய பிரேம்ஜி யுவனுடன் அசிஸ்டெண்டாக பணிபுரிந்தார். அதன் பிறகு யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு சில பாடல்களை பாடியுள்ளார்.

அதன் பின்னர் யுவன் இசையில் ஜூனியர் சீனியர் படத்திற்காக ஒரு பாடலை கேட்டுள்ளார் இந்த படத்தின் இயக்குனர்.  தித்திப்பாய் இருப்பா தேன் போல சிரிப்பா என்ற பாடலை கொடுத்துள்ளார். அந்தப் பாடலின் இசையை கேட்ட பிரேம்ஜி இந்த பாட்ட இயக்குனருக்கு கொடுக்க போகிறாயா என்று கலாய்த்தாராம் பிரேம்ஜி.

பிரேம்ஜிக்கு பிடிக்காத அந்த பாடல் அந்த படத்தின் இயக்குனருக்கு மிகவும் பிடித்திருந்ததாம் அதன் பிறகு அந்த பாடலை முழுமையாக முடித்துவிட்டு அவரிடம் கொடுத்து விட்டனர். இந்த பாடல் வெளியாகி அந்த சமயத்தில் மிக பெரிய அளவில் நல்ல வரவேற்பு பெற்றது என்று பிரேம்ஜி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

மேலும் பிரேம்ஜி யுவனின் அசிஸ்டெண்டாக இருக்கும்போது பிஜிஎம் வாசிக்க சொல்லி சில காட்சிகள் கொடுப்பாராம். அப்படி மன்மதன் படத்தின் இசைப் பணியில் இருந்த போது சிம்பு பிரேம்ஜியை கவனித்துள்ளார். அதன் பிறகு சிம்பு  பிரேம்ஜி இடம் உன்னை என்னுடைய அடுத்த படத்திற்கு  அதாவது வல்லவன் திரைப்படத்திற்கு நயன்தாராவுக்கு நண்பனாக நடிக்க வைக்கிறேன் என்று பிரேம்ஜிக்கு வாய்ப்பு கொடுத்து நடிகர் ஆக்கிவிட்டார்.

நடிகர் பிரேம்ஜி அமரனும் தனது நண்பர்கள் நடிக்கும் படங்களுக்கு பிரேம்ஜி அவர்கள் இசையமைத்துள்ளார். ஆம் என்னமோ நடக்குது, அச்சமின்றி, ஆர் கே நகர், மன்மத லீலை போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்  நடிகர் பிரேம்ஜி.