தல அஜித் அவர்கள் இளம் இயக்குனரான ஹெச்.வினோத்துடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிட்டி மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டங்கள் நிறைவதந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு எடுத்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது இருப்பினும் இதுவரையிலும் சில அதிரடியான சண்டைக் காட்சிகள் பைக் சேசிங் காட்சிகள் ஒரு பாடல் என படமாக்கப்பட்டுள்ளது என தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்து வருகிறார் இவர் தீவிர அஜித் ரசிகர் என்பது நாம் அறிந்ததே இவர்கள் இருவருக்கும் இணைந்தாலே அப்படம் மிகப்பெரிய ஹிட் அடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது அதுமட்டுமில்லாமல் இவர் அஜித்திற்காக ஸ்பெஷலாக தீம் மியூசிக் மற்றும் பிஜிஎம் என மிரட்டுவார் அதிலும் குறிப்பாக பில்லா, மங்காத்தா போன்ற படங்களில் இவர் போட்ட தீம் மியூசிக் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது அந்த அளவுக்கு வெறித்தனமான மியூசிக்கை போட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது அவர் வலிமை படத்தில் இணைந்து உள்ளது இப்படத்திற்கு கூடுதல் பலம் என்று கூறலாம் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்திலிருந்தே தாமதமாக துவங்கியது அப்பொழுது இவன் அவர்கள் இரண்டு பாடல்களை முடித்து விட்டார் அதில் ஒரு படலை காட்சியாக ஹைதராபாத்தில் படமாக்கினார். அது மட்டுமில்லாமல் அந்த பாடல் அறிமுக பாடல் என்பதால் தல அஜித் அவர்கள் வெறித்தனமான ஆட்டம் போட்டுள்ளார் அதுவும் சிறப்பாக வந்துள்ளது
தற்போது யுவன் சங்கர் ராஜா அவர்கள் வலிமை படத்திற்கான அனைத்து பாடல்களையும் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் எத்தனை தீம் மியூசிக் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது இப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்களும் 2 தீம் மியூசிக் அவளும் இருக்குதாம் பாடல்கள் பொருத்தவரை அஜித்தின் அறிமுக பாடல் ,ஒன்று காதல் பாடல் ,ஒன்று கொண்டாட்ட பாடல் மற்றும் மெலோடி பாடல் என வெரைட்டியான ஆல்பமாக உருவாகி உள்ளது என தற்போது தகவல் வெளியாகி உள்ளது அதிலும் குறிப்பாக தீம் மியூசிக் இரண்டும் மரண வெறித்தனமாக உள்ளது என கூறப்படுகிறது.
இந்த தீம் மியூசிக் திரையில் வெளிவரும்போது அஜித் திரையில் தோன்றும் காட்சிகள் எல்லாவற்றிலும் தியேட்டரில் உறுதியாக அனல்பறக்குமாம். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது வலிமை பட இசை பற்றி கேட்டதற்கு வலிமை தல படம் ,சும்மா செய்கிறோம் என கூறி அரங்கை அதிர வைத்தார் யுவன்.
இப்படத்தில் அஜித்தின் அனைத்து காட்சிகளும் செம்ம மாஸாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் திரையரங்கு அதிரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் மரண எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.