ரஜினி கமலுடன் இதுவரை ஒரு திரைப்படத்தில் கூட இணையாத யுவன்..! இவங்களுக்குள்ள அப்படி என்ன பஞ்சாயத்து..?

rajini-kamal-2

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் யுவன் சங்கர் ராஜா. இவ்வாறு பிரபலமான நமது இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இளையராஜாவின் வாரிசு என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இவர் திரையில் முதன் முதலாக அரவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து மாபெரும் இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார்.

அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன், வெங்கட்பிரபு, லிங்குசாமி, சீனுராமசாமி, ராம், தியாகராஜன், விஷ்ணுவர்தன்  போன்ற பல்வேறு இயக்குனர்களின் திரைப்படத்தில் இசையமைத்துள்ளார். இவ்வாறு இசை அமைப்பது மட்டுமின்றி தன்னுடைய சிறந்த குரலின் மூலமாக பல்வேறு பாடலையும் இவர் பாடியுள்ளார்.

பொதுவாக தல அஜித்தை ஆக்சன் ஹீரோவாக காட்டிய ஒரு திரைப்படம் என்றால் அது தீனா திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைத்திருப்பார் மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற வத்திகுச்சி பத்திகாதடி என்ற பாடல் மிகவும் பிரபலமாகிவிட்டது.

அந்தவகையில் யுவன்சங்கர்ராஜா பிரபலமாவதற்கு அஜித்தின் தீனா திரைப்படம் ஒரு முக்கிய பங்கு வகித்தது இதனைத்தொடர்ந்து புதிய கீதை திரைப்படத்தில் ஆறு பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து தன்னுடைய இசையை ரசிகர்களின் காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்க செய்தார்

இதனை தொடர்ந்து கமலின் விஸ்வரூபம்  மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த ஆகிய திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பதாக இருந்தது ஆனால் சில காரணத்தின் காரணமாக இவர் இசை அமைக்க முடியாமல்  வேறு ஒரு இசையமைப்பாளர் இசையமைக்க வேண்டி ஆயிற்று.

rajini kamal-1
rajini kamal-1

பொதுவாக சினிமாவில் தான் நடிக்கும் திரைப்படத்தில் இசையமைப்பாளரை தேர்வு செய்வது கதாநாயகனின் உரிமை தான் அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா கமல் மற்றும் ரஜினி உடன்  பணியாற்றவில்லை என்ற சந்தேகம்  ரசிகர்களுக்கு இருப்பது மட்டுமல்லாமல் அதற்கு ஏதேனும் காரணம் இருக்குமோ என சமூக வலைதள பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.