மணிமேகலையின் செயலைப் பார்த்து யூடியூப் நிறுவனம் போட்ட அதிரடி ட்வீட்!! வைரலாகும் வீடியோ.

manimegalai
manimegalai

விஜய் டிவியில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருபவர் தொகுப்பாளினி மணிமேகலை. இவர் தொகுப்பாளினியாக விஜய் டிவியில் அறிமுகமானார்.

தொகுப்பாளினி மணிமேகலை தனது பேச்சுத் திறமையினால் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். எனவே பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிறகு உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் மணிமேகலையின் பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் தற்போது தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

உசைன் மற்றும் மணிமேகலை இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்கள்.

இதனைத் தொடர்ந்து தற்போது இருவரும் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது மணிமேகலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வாழ்க்கையில் நீங்கள் செய்த சவாலான விஷயம் என்ன என்று இன்டர்வீவர் கேட்பது போலவும் அதற்கு உடனே மணிமேகலை கேஸ் அடுப்பை பற்ற  வைப்பது போலவும் இணையதளத்தில் உதாரணமாக வெளியிட்டுள்ளார்.