தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலைக்க வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்று வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து சிவகார்த்திகேயன் பல இளம் நடிகைகளுக்கு ஜோடியாக நடித்து கலக்கி வருகிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படம் தான் மாவீரன். இப்படத்தைப் பற்றிய ஏராளமான தகவல் சோசியல் மீடியாவில் வெளியான நிலையில் தற்போது மீண்டும் சில அப்டேட்டுகள் வெளியாகி உள்ளது. அதாவது மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
அதன் பிறகு இவர்கள் இணைந்து நடிக்க உள்ள இந்த திரைப்படத்தில் இயக்குனர் மிக்சன் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இத்திரைப்படத்தில் பழம்பெரும் நடிகை சரிதா சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு ஒவ்வொன்றாக தகவல் வெளியாகி வரும் நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக பிரபல யூடியூப் பிரபலம் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது சிவகார்த்திகேயன் தங்கை கேரக்டரில் நடிப்பதற்காக யூடியூபர் மோனிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளத்தில் விரைவில் மோனிஷா இந்த திரைப்படத்தில் இணைவார் என கூறப்படுகிறது.
இவ்வாறு மாவீரன் திரைப்படத்தினை மடோன் அஸ்வின் இயக்க இருக்கிறார். மண்டேலா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பரத் ஷங்கர் இசையில் விது அய்யனார் ஒளிபரப்பில் பிலோமீன் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.