சினிமா உலகில் தொடர்ந்து டாப் ஹீரோக்கள் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றியை ருசிக்கின்றன ஆனால் விமர்சனம் என்ற பெயரில் ஒரு சிலர் யூடியூபில் தவறுதலாக படத்தைப் பற்றிக் கூறி படத்தின் வெற்றியை தடுக்கின்றனர்.
படத்தைப் பார்த்து யூடியூபில் நடுத்தரமாக விமர்சனத்தை சொன்னால் போதும் ஆனால் ஒரு சிலரோ தனது கிறுக்குத் தனமான பதில்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக எல்லா படத்தையும் நக்கலும் நையாண்டியுமாய் ஆரம்பித்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதிலும் குறிப்பாக அஜித் விஜய் ஆகியோர் ரசிகர்களை சீண்டிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இப்பொழுது ப்ளூ சட்டை மாறன் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிப்பில் உருவான வீட்டில விசேஷம் படத்தையும் விமர்சனம் செய்திருந்தார் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர் ஜே பாலாஜி பட்ஜெட் டிஷர்ட்டைப் போட்டுக் கொண்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அது தற்பொழுது ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக இருக்கிறது.
அதில் ஆர்ஜே பாலாஜி சொன்னது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் வீட்டில விசேஷம் படம் ரொம்ப பிடித்துப் போயிருக்கிறது பச்சை சட்டை ஆகிய எனக்கும் இந்த படம் ரொம்ப பிடித்து போய் உள்ளது அதனால் ப்ளூ சட்டைக்கு இந்த படம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி ஒரு வித்தியாசமாக கலாய்த்து தள்ளினார் ஆர் ஜே பாலாஜி
அதில் வீடியோ கூட தற்போது இணைய தள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. பாலாஜி சொன்னதுபோல மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று நாளுக்கு நாள் வசூல் வேட்டையை சூப்பராக நடத்திவருகிறது வீட்டில் விசேஷம் திரைப்படம்.
#VeetlaVisheham நடந்தது என்ன ?😎 pic.twitter.com/2gfyIsJXP9
— RJ Balaji (@RJ_Balaji) June 21, 2022