சமூக வலை தளத்தை பயன்படுத்தி பலரும் சமீபகாலமாக பிரபலம் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் யூடியூப் என்ற சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமடைந்தவர்களில் ப்ரிகிடா என்பவரும் ஒருவர்.
இவரை ப்ரிகிடா என்றால் பலருக்கு தெரியாது, ஆனால் பவி டீச்சர் என்றால் பலருக்கும் தெரியும் ஏனென்றால் அதுதான் அவரின் அடையாளம். பவி டீச்சர் என்ற கதாபாத்திரம் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
ஏனென்றால் இவர் புடவை கட்டி தான் பல ரசிகர்களும் பார்த்திருப்பார்கள் இந்த நிலையில் புதிதாக மாடர்ன் உடையில் ரசிகர்களுக்கு காட்சி கொடுத்துள்ளார். பவி டீச்சர் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் என்ற வெப்சீரிஸ் மூலம் பிரபலமடைந்தவர்.
இந்த சீரியஸ் மூலம்தான் தமிழ் டீச்சராக அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இவர் தற்பொழுது யூடியூப் மூலம் பிரபலமானவர்களின் இவரும் ஒருவர். இந்த வெப்சீரிஸ் மூலம் கிடைத்த பிரபலத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதுவும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் பவி டீச்சர் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.
இந்தநிலையில் மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார்
இதோ அந்த புகைப்படங்கள்.