உங்க தாத்தா தான் சூப்பர் ஸ்டார்.. நான் இல்லை.. மகனிடம் சொல்லி புரியவைத்த தனுஷ்.!

rajini
rajini

சினிமா உலகில் ஒவ்வொருவரும் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற ரொம்பவும் கஷ்டப்பட்டு அசிங்கப்பட்டு தான் ஒரு படிப்படியாக முன்னேறி இந்த இடத்தை பிடிக்கின்றனர் அப்படித்தான் நடிகர் தனுஷும் சினிமா ஆரம்பத்தில் இவர் எல்லாம் ஒரு நடிகரா அப்படி தெரியவில்லை என கேலியும் கிண்டலும் அவமானங்களை சந்தித்து படிப்படியாக தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து வெற்றி படங்களை கொடுத்து தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக தனுஷ் திகழ்கிறார். சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருவதால் இவரது மார்க்கெட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது சினிமாவில் வெற்றியை ருசித்தாலும் நிஜ வாழ்க்கையில் தற்பொழுது சில பிரச்சனைகளை சந்தித்துள்ளார் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை காதலித்து பின் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர்.  ஐஸ்வர்யாவும் தனுஷும் திருமணம் செய்து கொண்டு 14 வருடங்கள் ஆன நிலையில் திடீரென சில பிரச்சனைகளால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களை சேர்த்து வைக்க இரு குடும்பமும் எவ்வளவோ முயற்சித்தது ஆனால் எந்த பேச்சு வார்த்தையும் இவர்களை சேர்த்து வைக்க முடியவில்லை இப்பொழுது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர் என சொல்லப்படுகிறது.

இதனால் தனுஷின் மகன்கள் சில நாட்கள் அம்மாவிடமும் சில நாட்கள் அப்பா உடனும் இருந்து வருகின்றனர் அண்மையில் கூட மகனுக்காக இருவரும் பள்ளிக்கூடம் வந்தனர் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் தீயாய் பரவியது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷ் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது.

இளைய மகனுக்கு கோபம் வந்துவிட்டால் அவ்வளவுதான் வீட்டில் இருக்கும் எல்லா பொருள்களையும் உடைப்பார்  குறிப்பாக விலை உயர்ந்த பொருட்களை பார்த்து நான் உடைப்பார். அப்பொழுது அவனிடம் சொல்லுவது உன் தாத்தா தான் சூப்பர் ஸ்டார் அப்பா இல்லடா என கூறுவேன் என்று பேசிய அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.