“லியோ” படத்தில் உங்களுடைய பங்களிப்பு பெருசு.. எத்தனை தடவை நன்றி சொன்னாலும் பத்தாது – லோகேஷ் வெளியிட்ட மாஸ் புகைப்படம்

leo
leo

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக ஓடிக் கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ் இவர் இதுவரை விரல்விட்டு என்னும் அளவிற்கு தான் படங்களை எடுத்து இருக்கிறார் அந்த படங்கள் ஒவ்வொன்றும் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதிலும்  கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜயுடன் கூட்டணி அமைத்து லியோ படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார். இவருடைய மற்ற படங்களைப் போலவே இந்த படமும் போதை பொருளை சம்பந்தமாக வைத்து தான் நகரும் என சொல்லப்படுகிறது. பூஜையில் போட்ட உடனேயே லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது.

அதை முடித்துவிட்டு 180 பேர் தனி விமானத்தின் மூலம் காஷ்மீருக்கு பறந்தது அங்கு மைனஸ் குளிர் என்று கூட பார்க்காமல் படத்தின் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக எடுத்து வருகிறது. படத்தில் விஜய் உடன் கைகோர்த்து  அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், திரிஷா, பிக் பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இதுவரை மிஷ்கின்னுடைய காட்சிகள் மட்டும் தான் முழுமையாக முடிவடைந்து உள்ளதாம். வெளியே வந்த மிஷ்கின் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார் அதில் அவர் சொன்னது..  லோகேஷ் கனகராஜ் தேர்ச்சி பெற்ற ஒரு  இயக்குனர் போல் அன்பாக நடந்து கொண்டார்.  மேலும் களத்தில் ஒரு தனி வீரனாக  அவர் செயல்பட்டு கொண்டிருந்தார் என கூறினார்.

இந்த செய்தி மிகப்பெரிய அளவில் வைரலானது இதை பார்த்த லோகேஷ் கனகராஜ் இதற்கு ரீ ட்வீட் போட்டுள்ளார் அதில் அவர் சொன்னது.. உங்களுடன் சேர்ந்து பணியாற்றியதை என்னால் விவரிக்க முடியவில்லை.. இந்த சந்தோஷத்தை வெளிப்படுத்த எத்தனை நன்றிகள் சொன்னாலும் பத்தாது. உங்களுக்கு மில்லியன் நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.