போஸ்டர்ல உன் மூஞ்ச பாத்தா.. திரையரங்கிற்கு கூட்டம் வரவே வராது.? விஜய்சேதுபதியை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்.!

vijay sethupathy
vijay sethupathy

தமிழ் சினிமாவுலகில் படிப்படியாக முன்னேறியவர் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு புரிந்து கொண்டு  மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஏற்றவாறு படங்களை கொடுக்க ஆரம்பித்தார். அந்த படங்களில் தனது முழுத் திறமையையும் காட்டியதால் இவரது திரைப்படங்கள் வெற்றியை ருசித்தன மேலும் வெகு விரைவிலேயே டாப் நடிகையான சமந்தா, நயன்தாரா போன்ற நடிகைகளுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

சினிமாவுலகில் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் அதில் சிறப்பாக நடித்த அசத்தினார். இதனால் இவரை வைத்தே படங்களை இயக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இப்பொழுதும் போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழை தாண்டி தெலுங்கு ஹிந்தியிலும் இவரை கவர் செய்ய நிறைய தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஆசை காட்டி வருகின்றனர்.

இப்படி சினிமா உலகில் முன்னணி நடிகராக வரும் விஜய்சேதுபதி ஆரம்ப காலகட்டங்களில் பல இடங்களில் அவமானமும் பட்டு இருக்கிறார். இந்த உலகில் நல்லது கெட்டது நடக்கும் ஆனால் நாம் நல்லதையே எடுத்துக் கொண்டு நகர வேண்டும் அதை விஜய் சேதுபதி சரியாக புரிந்து வைத்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் இவரது ஒரு திரைப்படம் தள்ளிக்கொண்டே போனது அந்த சமயம் ஒரு பிரபல தயாரிப்பாளர் அவரது பழக்கம்.

சிறிய படங்களை வாங்கி வெளியிட்டு படக்குழுவிற்கு உதவி செய்வார் அவரிடம் சென்று விஜய்சேதுபதி உதவி கேட்டுள்ளார். விஜய் சேதுபதியும் தயாரிப்பாளரும் பேசியுள்ளனர் அப்பொழுது உன் முகத்தை எல்லாம் போஸ்டரில் ஒட்டினால் யார் பார்ப்பார்கள் திரையரங்கில் கூட்டம் வராது என விஜய் சேதுபதியை அவமானப்படுத்தி பேசி அனுப்பி விட்டாராம் ஆனால் விஜய் சேதுபதியே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அந்த படத்தை வெளியிட அதிக முனைப்பு காட்டி இருக்கிறார்.

சினிமா உலகில் பல நல்லது இந்த விஷயங்களை விஜய்சேதுபதி பார்த்து இருந்தாலும். நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு ஓடி வந்ததால் தான் இப்பொழுது சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக அவர் இருக்கிறார். ஆரம்பத்தில் அசிங்கப்படுத்திய  அந்த தயாரிப்பாளர் இப்போதே விஜய்சேதுபதியிடம் வந்து கால்ஷீட் கேட்டால் அவரும் தரப்போவதில்லை அதை தயாரிப்பாளரும் உணர்ந்திருப்பார் விஜய் சேதுபதியை ஆரம்பத்திலேயே அசிங்கப்படுத்தி வீட்டோம் தரமாட்டார் என்று அவருக்கும் தெரியும். அந்த தயாரிப்பாளர் யார் என்று மட்டும் இன்றுவரை தெரியவில்லை.

ஒரு வேலை கலைபுலி தாணுவாக இருக்குமோ என கிசுகிசுக்கப்படுகிறது. பெரிய படங்களை எடுப்பதையும் தாண்டி சில சிறிய பட்ஜெட் பட திரைப்படங்களை வெளியிடுவதில் பெரும் உதவிகரமாக இருக்கிறார் அதேசமயம் விஜய் சேதுபதி திரைப்படங்களை அவர் தயாரித்ததுமில்லை வினியோகம் செய்ததும் இல்லை இதனால் அவர் ஆக இருக்கும் என பலரும் கூறுகின்றனர் அவர் இல்லை..