தற்பொழுது உள்ள ஏராளமான நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமடைந்து வருபவர்கள் பலர் உள்ளார்கள். மேலும் இவர்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தங்களது புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் ரசிகர்களிடம் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தமிழ் இளம் நடிகை ஒருவர் நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக கூறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.
தமிழ் திரைவுலகில் தொடர்ந்து சில திரைப்படங்களின் அடுத்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்தான் நடிகை பிரியா ஆனந்த்.இவர் தற்பொழுது தமிழில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவர் வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து வணக்கம் சென்னை, இரும்பு குதிரை, வை ராஜா வை, எதிர்நீச்சல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவர். இவ்வாறு சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவர் தற்பொழுது அந்தகன், சுமோ, காசேதான் கடவுளடா ஆகிய மூன்று திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நித்தியானந்தாவின் மீது தனக்கு கிரஷ் இருப்பதாகவும் அவரை திருமணம் செய்ய கூட ஆசைப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார். நித்தியானந்தாவை திருமணம் செய்து கொண்டால் எனது பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது அவசியம் இல்லை என்று அவர் கூறிய பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தற்பொழுது நித்தியானந்தா பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டதை அடுத்த அவர் தலைமறைவாகியுள்ளார். மேலும் கைலாசம் என்ற கற்பனை நாட்டில் நான் இருப்பதாக அவ்வப்பொழுது அவர் கூறிக் கொண்டிருந்தாலும் எந்த நேரத்திலும் அவர் போலீசாரிடம் பிடிப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.