அவங்க சொல்ற மாதிரி செஞ்சா இளம் நடிகைகள் நிச்சயமா சினிமாவுல டாப்ல வரலாம்.? மறைமுகமாக விமர்சிக்கும் சிம்ரன்.!

simran
simran

சினிமா உலகில் இருக்கும் பலரும் தனது திறமையை காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்க தான் ஆசைப்படுகின்றனர் ஆனால் சினிமா உலகில் ஒரு சிலர்  நடிகர் நடிகைகளை கட்டாயப்படுத்தி ஒரு சில விஷயங்களை செய்ய சொல்லுகின்றனர் அது குறித்து விலாவாரியாக பேசியுள்ளார் பிரபல நடிகை.

90 காலகட்டங்களில் தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றியை ருசித்தவர் நடிகை சிம்ரன். இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவது வழக்கம். அதேபோலவே தான் கிளாமர் காட்சிகளில் பின்னி பெடல் எடுப்பது இவரது ஸ்டைல்.

இவரது இடுப்பழகி பார்க்கவே அப்பொழுது ரசிகர்கள் கூட்டம் நிறைய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சிம்ரன் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வந்தாலும் ஒரு கட்டத்தில்  வயது அதிகமாகி  கொண்டே போனதால் சினிமா உலகில் இப்பொழுது குணச்சித்திரம், வில்லி கதாபாத்திரங்கள்தான்  பெரிதும் கிடைக்கின்றன.

நடிகை சிம்ரன் துள்ளாத மனம் துள்ளும் படத்தின் போது பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார் அதில் அவர் சொன்ன செய்தி.. கிளாமர் என்பது நடிக்க வந்த முதல் இரண்டு வருடங்களில் ஓகே ஆனால் சினிமாவில் நிலைத்து நிற்க திறமையான நடிப்பு தான் முக்கியம் நான் எப்பொழுதும் கிளாமரை விட வேண்டும் என்று நினைத்தது இல்லை கிளாமர் என்பது அதிக கவர்ச்சி அல்ல நீங்கள் உங்கள் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் அளவிற்கு அழகாக இருக்கவேண்டும். அதீத கவர்ச்சி வல்கராக இருக்கும்.

நான் நடித்து வந்த சமயத்தில் கிளாமரான உடை அணிந்து இருக்கிறேன் ஏனெனில் சினிமா துறையினர் உங்களை அந்த மாதிரியான ஆடைகளை அணிய கட்டாயப்படுத்தவாங்க ரசிகர்களும் அதைத் தான் விரும்புவாங்க நான் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் நிறைய கஷ்டப்பட்டேன் அதை என்னால் மறக்கவே முடியாது என கூறினார்.