தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் 40 வருடங்களுக்கு மேலாக சினிமா உலகில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக அண்ணாத்த படத்தில் நடித்தார் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றியை ருசித்தது.
அதை தொடர்ந்து அடுத்த ஒரு பிரம்மாண்ட வெற்றியை கொடுக்க இளம் இயக்குனர் நெல்சன் உடன் ரஜினி கைகோர்த்து ஜெயிலர் படத்தில் நடிக்க இருக்கிறார் இது ரஜினிக்கு 169 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது
தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், கன்னடா சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.
அண்மையில் இந்த படத்தின் பூஜை பெரிய அளவில் போடப்பட்டது அதனைத் தொடர்ந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது நிச்சயம் இந்த படம் ரஜினிக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என சொல்லி வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் ஆக்சன் திரில்லர் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் வசந்த் ரவி ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவிலேயே வரும் என சொல்லப்படுகிறது.
நிச்சயம் ஜெயிலர் திரைப்படம் ஆக்சன் திரில்லர் கலந்த ஒரு திரைப்படமாக இருக்கும் என இதிலிருந்து தெரிய வருகிறது. மேலும் நெல்சன் இன்னும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு சிறந்த நடிகர்களை செலக்ட் செய்து வருவதாகவும் ஒரு பக்கம் தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.