விஜயை வைத்து படம் எடுக்க துடிக்கும் இளம் இயக்குனர்.? எடுத்த 2 படமே சூப்பர்ஹிட் தான்.

vijay
vijay

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய் தனது 66வது திரைப்படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தினை தெலுங்கு இயக்குனர் வம்சி மற்றும் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம் போன்ற பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

படம் வேற லெவலில் உருவாகி வருகின்ற நிலையில் படக்குழு படத்தினை அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த படத்தை தொடர்ந்து விஜயின் அடுத்த 67-வது திரைப்படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்ற தகவலும் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

இதனையடுத்து சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை நடிகரும் இயக்குனருமான அருண் ராஜா காமராஜ் எடுத்திருந்தார். இந்த படம் ஒரு சமூக அக்கறை உள்ள படமாக உருவாகி உள்ளதால் நாளுக்கு நாள் திரையரங்கில் மக்கள் கூட்டம் நாடி வருகின்றனர்.

மேலும் வசூல் வேட்டையும் சிறப்பாக நடத்தி வருகின்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இடம் ஒரு ரசிகராய் நீங்கள் யாரை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறார்கள் என ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குனர் அருண்ராஜா காமராஜ் நான் தளபதி விஜயை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.