இந்திய அணி வங்கதேசம் சென்று மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் 2 -1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை இழந்தது. இருப்பினும் கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்தது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது இஷான் கிஷன் மற்றும் விராட் கோலி தான் இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் போகப்போக அதிரடியை காட்ட ஆரம்பித்தனர் குறிப்பாக இஷான் கிஷன் நாலா பக்கமும் சிக்ஸர்களும், பவுண்டரிகளை பறக்க விட்டு வங்கதேச அணியின் பவுலர்களை புலம்ப வைத்தார்.
தொடர்ந்து மைதானத்தில் பந்துகளை பறக்க விட்ட இவர் 126 பந்துகளில் 23 பவுண்டரி 9 சிக்ஸர்கள் உட்பட 200 ரண்களை எடுத்தார் அதன் பிறகு சிறு அதிரடியை காட்டினார் ஒட்டுமொத்தமாக 131 பந்தில் 210 ரன்கள் எடுத்து அவர் வெளியேறினார். வெளியே வந்து பேசிய இஷான் கிஷன் இரட்டை சத்தம் அடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சச்சின், சேவாக், ரோஹித் போன்ற இரட்டை சதம் அடித்தவர்களுடன் எனது பெயரையும் சேர்த்து வைத்து பேசுவது அற்புதமான உணர்வை தருகிறது இரட்டை சதம் அடித்ததற்கு பிறகு 10, 15 ஓவர்கள் மிச்சம் இருந்தது இதனால் மூச்சத்தை இலக்காக வைத்து விளையாடினேன். ஆனால் முடியவில்லை எனக் கூறினார் மேலும் பேசிய அவர் நான் சிக்ஸர் மூலம் 100 ரன்களை பூர்த்தி செய்ய விரும்பினேன்.
ஆனால் கோலி என்னிடம் வந்து இது உனக்கு முதல் சதம் சிங்கிளாக எடுத்து விளையாடி சதம் அடி எனக் கூறினார் மேலும் எந்தெந்த பவுலர்களை டார்கெட் செய்வது எப்படி விளையாட வேண்டும் என்பதை களத்தில் அடிக்கடி கூறி வந்தார். போட்டி தூங்குவதற்கு முன் சூரியகுமார் யாதவிடம் ஆலோசனை கேட்டேன் பந்துக்களை நன்றாக பார்த்தாலே சிறப்பாக விளையாட முடியும் என கூறினார். அப்படித்தான் நான் விளையாடினேன் என தெரிவித்தார்.