விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வரும் நிலையில் ஆரம்பத்தில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த பல இளம் நடிகைகள் மற்றும் நடிகர்கள் இதில் பங்கு பெறுவதற்காக போட்டி போட்டு கொண்டனர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் தங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றமும் நடக்கவில்லை என்பதை பலரும் தெரிந்து கொண்ட நிலையில் சில சீசன்களாக அதிகம் சம்பளம் கொடுத்து அழைத்தாலும் பெரிய கும்பிடு போட்டு வேண்டாம் என கூறி வருகிறார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறாமல் இருப்பதற்கு முக்கியமான ஒரு காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து கலந்துக் கொள்கின்றனர். அப்படி நடிகை ஓவியா, ரைசா வில்சன், மும்தாஜ், அபிராமி, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தாத்தா, வனிதா விஜயகுமார், ரேகா, மீரா மிதுன், காயத்ரி, கஸ்தூரி, ஷெரின், ரம்யா பாண்டியன், பிந்து மாதவி, ஜனனி என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.
இவ்வாறு இந்த சீசன் ஒளிபரப்பாகும் பொழுது மட்டும்தான் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கென தனி மவுசு இருக்கிறது இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு பலருக்கும் பதர வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே இது மட்டுமல்லாமல் பலரும் இந்நிகழ்ச்சியின் மூலம் தங்களது பெயரை கெடுத்துக் கொண்டவர்களும் இருக்கின்றனர்.
எனவேதான் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற பயப்படுகிறார்கள் அப்படி இந்நிகழ்ச்சியில் ஜெயித்தால் முதல் பரிசை 50 லட்சம் என்பதை 6 சீசன்களாக உயர்த்தாமல் அப்படியே நடத்தி வருகின்றனர். மேலும் தினமும் ஒவ்வொரு நாளும் நடிகர்களின் செல்வாக்கிற்கு ஏற்ப சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிகபட்சம் விஜய் டிவி பிரபலங்கள் 25 ஆயிரம் வாங்கியுள்ளார்கள்.
எனவே இளம் நடிகர் நடிகைகள் என்றால் 2 லட்சம் வரை கொடுக்கப்படும் ஆனால் அதைவிட கூடுதலாக கொடுக்க தயாராக இருந்தாலும் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசன்களாக நடிகர்கள் மற்றும் இளம் நடிகைகள் கலந்துக் கொள்வதை விரும்பவில்லை. ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக உள்ளே நுழைந்து விட்டால் பிரியங்கா போல ட்ரோல் செய்வது கொஞ்சம் கூடுதலாக இருக்கும் எனவே அப்படி இருந்தாலும் அதனைப் பற்றி பயப்படாமல் இறங்கி விளையாட வேண்டும்.
ஆனால் அப்படி விளையாண்டாலும் ரசிகர்கள் அவர்களை வைத்து செய்து விடுவார்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிதாக வாய்ப்புகளும் கிடைப்பது இல்லை எனவே இதன் காரணமாகவே இளம் நடிகைகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்கள்.