தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் கமல் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் இந்தியன் 2, விக்ரம் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகிறது. தற்பொழுது விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.
விக்ரம் திரைப்படத்தில் கமல் சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடனம் ஆடிவுள்ளார். அந்த வீடியோக்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது பிரபல நடிகை ஒருவர் இத்திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது தொகுப்பாளராக மீடியாவுக்கு என்றி கொடுத்தவர்தான் ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன். இவர் மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியான half boil என்ற வெப் சீரியலில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவருக்கு ரசிகர்கள் பெரிதும் தங்களது ஆதரவை எடுதது வந்தார்கள் எனவே தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றார்.
இவ்வாறு விரைவில் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறி இவர் தற்போது சவரகத்தி,கீ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவருக்கு கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாப்பத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். விக்ரம் திரைப்படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.