ஜில்லா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தை புட்டு புட்டு வைத்த நடிகை.. கடைசில விஜயை பத்தி இப்படி சொல்லிட்டாங்களே..

vijay
vijay

சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்வர்களிடம் இருந்து பல விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம் என இளம் நடிகர் நடிகைகள் நினைப்பது வழக்கம் ஒரு சில நடிகர்கள் இதுதான் சினிமா, இப்படித்தான் இருக்க வேண்டும், சினிமாவில் இப்படி தான் நடிக்க வேண்டும் என சொல்லித் தருவார்கள்.

ஆனால் ஒரு சில முன்னணி நடிகர்கள் தனது ஷூட்டிங் முடித்த உடனேயே கேரவனுக்கு சென்று கதவை சாத்திக் கொள்வார்கள் இப்படிப்பட்டவர்களும் திரை உலகில் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும்  ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றவர்களிடம் இருந்து எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என இளம் நடிகர் நடிகைகள் நினைக்கின்றனர்..

இதில் அஜித், கமல் போன்றவர்கள் சினிமாவில் நடப்பதை வெளிப்படையாக பேசக்கூடியவர்கள் ரஜினி ஏதாவது கேட்டால் மட்டுமே விஷயத்தை திறப்பார் விஜய் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் யாரிடமும் அவ்வளவு சீக்கிரமாக போய் பேச மாட்டார்  என்று பல தடவை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்த பிரபலம் அடைந்த நடிகை வினோதினி.

ஜில்லா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் நடந்து கொண்டது குறித்து மிகவும் வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.. சிவாஜி கணேசன், எம்ஜிஆர் ஆகியோர்கள் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நான் இல்லாமல் போயிட்டேனே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. அந்த காலகட்டத்தில் சினிமா துறையில் நடந்த ஒரு விஷயம் கூட நமது காலகட்டத்தில் நடக்கவில்லையே என தோன்றும்..

ஒரு படப்பிடிப்பு தளத்தில் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் நடித்துக் கொண்டிருந்த போது சிவாஜி சார், எம்ஜிஆர் சாருக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுத்தாராம் இதுபோன்று இப்பொழுது எங்கேயும் நடக்கவில்லை நான் ஜில்லா படத்தில் விஜய் உடன் நடித்தேன். பல பேட்டிகளில் விஜயுடன் நடித்த அனுபவத்தை கூறுங்கள் என கேட்டுள்ளனர் ஒண்ணுமே கிடையாது விஜய் காலையில் படப்பிடிபுக்கு வருவார்  எல்லோரிடமும் குட் மார்னிங் என்று கூறுவர் நாங்களும் குட் மார்னிங் என்று கூறுவோம் நடித்து முடித்தவுடன் அவர் கேரவனுக்குள் போய்விடுவார். நான் என்னுடைய கேரவனுக்கு போய் விடுவேன் என வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார்.

vinothini
vinothini