தமிழ் திரைஉலகில் ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் தல அஜித். சினிமாவில் அதிக ஈடுபாடு இருந்தாலும் சினிமாவில் நடிப்பதை தவிர வேறு எதிலும் பெரிதும் ஈடுபாடு செலுத்த மாட்டார் இதுவே மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால் இவரது படத்தையும் தாண்டி இவரை எப்பொழுதும் கொண்டாடி வருகின்றனர்.
இருப்பினும் சமீபகாலமாக ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக சமூக அக்கறை உள்ள படங்களையும் மற்றும் பாசத்தை வெளிக்காட்டும் விதமான படங்களையும் கொடுத்து வருகிறார்.
அத்தகைய திரைப்படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்திய நிலையில் தற்போது சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்ற ஹச். வினோத்துடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இரவு / பகல் பார்க்காமல் மிக வேகமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அஜித் ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் மூவரும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டன அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன அந்த புகைப்படத்தில் குட்டி தல ஆத்விக் சற்று வளர்ந்து செம்ம லுக்கில் இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
அந்த புகைப்படமும் அஜித் அதே சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது சேர்த்து இணைக்கப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதை நீங்களே பாருங்கள்.