சினிமாவில் சிறந்த ஜோடிகளாக திகழ்ந்த பலரும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ்கின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் அஜித் – ஷாலினியை தொடர்ந்து சூர்யா – ஜோதிகா.. முதலில் வேறு படங்களில் ஜோடி போட்டு நடித்தனர் அப்பொழுது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து பின் திருமணம் செய்து கொண்டனர்.
இருவருக்கும் ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இப்பொழுதும் இரண்டு பேரும் திரை உலகில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வெற்றிகளை குவிக்கின்றனர் மறுபக்கம் இருவரும் இணைந்து 2டி என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர் இதனால் இந்த ஜோடிக்கு நாலா பக்கமும் காசு குவிக்கிறது.
நடிகர் சூர்யா ஜெய்பீம், வாடிவாசல் திரைப்படத்தை தொடர்ந்து தனது 42 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் ஒரு சங்க காலத்து படமாக உருவாகி வருகிறது மறுபக்கம் ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்கள் அவ்வபோது டாப் நடிகரின் படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
திரை உலகில் இப்படி ஜொலிக்கும் ஜோதிகா ஒரே ஒரு நடிகருடன் நடிக்க கூடாது என சூர்யா அட்வைஸ் செய்துள்ளார். அந்த நடிகர் வேறு யாரும் அல்ல தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டு இருக்கும் தனுஷ் உடன் தான் ஜோதிகா நடிக்க கூடாது என சூர்யா கடிவாளம் போட்டு இருக்கிறாராம்.. ஜோதிகாவுக்கும், சூர்யாவுக்கு திருமணமான ஆரம்பத்தில் ஜோதியாக கையில் மொத்தம் ஐந்து திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆனார்..
ஆனால் அத்தனை திரைப்படத்தையும் ஜோதிகா வேண்டும் என்று உதறி தள்ளிவிட்டார் அதில் ஒன்றுதான் யாரடி நீ மோகினி இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஜோதிகா தானாம் ஆனால் சூர்யா தனுஷ் உடன் நடிக்க கூடாது என கடிவாளம் போட்டாராம்.. ஏனென்றால் தனுஷ் உடன் இணைந்த நடித்த நடிகைகள் பலரும் மார்க்கெட் இல்லாமலும்.. சர்ச்சைகளில் சிக்கி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..