அபர்ணா பால முரளி மலையாளத்தில் ஓரிரு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் இவர் நடித்த சூரரை போற்று திரைப்படம் தான் அவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான சூரரை போற்று படத்தில் ஹீரோயின் ஆக கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிக சூப்பராக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு தமிழ் சினிமாவிலேயே கிடைக்க தொடங்கியது. அண்மையில் கூட அபர்ணா பாலமுரளி ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிப்பில் உருவான வீட்டில் விசேஷம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருப்பதால் அபர்ணா பாலமுரணியின் சினிமா பயணம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
தற்பொழுது கூட நித்தம் ஒரு வானம் என்ற படத்தில் கார்த்தி உடனும், தலைப்பு வைக்கப்படாத ஒரு படத்திலும் இவர் கமிட் ஆகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள நடிகை அபர்ணா பால முரளி அண்மையில் பிஹைன்வுட்ஸ் ஊடகத்தின் விருது விழா நிகழ்வில் அவர் கலந்து கொண்டார் அப்பொழுது இவர் பேசினார்.
பல்வேறு விதமான கேள்விகளும் கேட்டனர் அதில் ஒன்றாக உங்களுக்கு எந்த மாதிரியான லைஃப் பார்ட்னர் வரவேண்டும் என கேட்டுள்ளனர் அதற்கு சற்றும் யோசிக்காமல் நான் ஜோதிகா மேம் நிறைய இன்டர்வியூக்களை பார்த்திருக்கிறேன் அதில் சூர்யா சார் எப்படின்னு நிறைய பகிர்ந்து இருக்காங்க அதை பார்த்ததிலிருந்து எனக்கு சூர்யா சார் மாதிரி பாட்னர் தான் வேணும்னு முடிவு செய்தேன்.
நான் தேர்ந்தெடுக்கிற ரெஸ்பெக்ட் கொடுக்க தெரிஞ்சவரா… ஜென்டில்மேன்னா.. என் விஷயத்தில் எதுவும் குறுகிட்டாதவராய் இருக்கணும் என கூறினார். மேலும் பேசிய அவர் சூரறை போற்று படத்தில் பொம்மியாக தான் தோன்ற தன்னைவிட மிகவும் உழைத்தது படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா தான் என கூறினார்.