தமிழ் சினிமாவில் இப்ப உச்ச நச்சத்திரமாக இருக்கும் அஜித். ஆரம்ப காலகட்டத்தில் அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர் யார் எது சொன்னாலும் நம்பக் கூடியவராக தான் இருந்திருக்கிறார்.ஆனால் அப்போதைய காலகட்டத்தில் யாரை நம்புறது யாரை நம்பக் கூடாது என்றே தெரியாத காலம்.
அப்பொழுது சினிமாவில் பல இன்பங்களையும் துன்பங்களையும் தாண்டித்தான் படிப்படியாக இந்த இடத்தை அவர் அடைந்துள்ளார். இப்பொழுது அவர் தனது நண்பர்களின் சேர்க்கையை மிக கம்மியாக வைத்துக் கொண்டு சிறப்பாக பயணிக்கிறார்.ரசிகர்களுக்காக தனது உடல் வலியை பொறுத்து கொண்டு சமீபகாலமாக சூப்பர்ஹிட் படங்களை கொடுக்கிறார்.
அந்த வகையில் விஸ்வாசம், நேர்கொண்டபார்வை ஆகிய படங்களை தொடர்ந்து இரண்டாவது முறையாக கைகோர்த்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏனென்றால் படம் இன்னும் வெளிவரவில்லை அதற்குள் இந்த படத்திற்கான அப்டேட் மட்டுமே வேற லெவலில் இதுவரை இருந்து வந்துள்ளது.
போதாத குறைக்கு படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் பலரும் இந்த படம் வேற லெவலில் உலக தரத்தில் இருக்கும் என கூறி வருவதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் இளம் வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
அஜித் இப்பொழுது வேண்டுமானால் அனைத்தும் அறிந்த பிறகு அடக்க ஒடுக்கதுடுடன் இருந்து வருகிறார். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இவர் செம ஜாலியாக இருந்தது தெரிய வருகிறது அதற்கு எடுத்துக்காட்டு இந்த புகைப்படம் என்று கூறலாம். பள்ளி பருவத்தில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.