இந்த நடிகருடன் தான் டேட்டிங் போக வேண்டும்.! திருமணமான நடிகர் மீது ஆசைப்படும் ஜீவிதா..

jeevitha
jeevitha

சின்னத்திரையில் நடித்து வரும் ஏராளமான நடிகைகள் வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை ஜீவிதா. இவர் தொடர்ந்து சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்தியின் அக்காக்களில் ஒருவராக நடித்திருந்தார்.

இந்த படத்திற்குப் பிறகு இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் இவர் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நாள்தோறும் தன்னுடைய அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து சில பேட்டிகளையும் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனலில் கலந்து கொண்ட இவர் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசிய தகவல் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர் யாருக்கும் பயப்படாமல் மிகவும் தைரியமாக பேசியது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று தந்தது. ஆம், அதாவது அவர் கூறியதாவது அட்ஜஸ்ட்மென்ட்க்கு நான் ஒப்புக் கொள்ளாத காரணத்தினால் 300 படங்களுக்கு மேல் மிஸ் செய்திருக்கிறேன் என்றும் சினிமாவில் நடிகைகளுக்கு பெரிதளவில் பாதுகாப்பு இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் அந்த பேட்டியில் இவரிடம் நீங்கள் யாருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறீர்கள் என்று தொகுப்பாளர் கேட்ட நிலையில் டேட்டிங் என்றால் எனக்கு என்னவென்று தெரியவில்லை.. ஆனால் ஒருவரை கூப்பிட்டு பேச வேண்டும் என்றால் நடிகர் கார்த்திக் சாருடன் டேட்டிங் செல்ல ஆசை அவர் மிகவும் நல்ல மனிதர் என்று தெரிவித்துள்ளார் நடிகை ஜீவிதா.